தமிழ்மணம்

Monday, July 20, 2015

ஆதிவாசியாக வாழ ஆசை

திவாசிகள் என்ன குறை கண்டிருப்பார்கள் நிச்சயம் குறை இருந்திருக்க வாய்ப்பில்லை.. மகிழ்ச்சியாக நிறைவுடனே வாழ்ந்திருப்பார்கள். ஆம், பச்சை பசலென காடுகளின் பாதுகாப்பில், இயற்கை அன்னையின் அரவணைப்பில் வாழ்ந்திருப்பார்கள். அவ்வபோது வந்துபோகும் சில நோய்களுக்கும் இலை காய்களே மருந்துகளாய் மலர்ந்திருக்கும். அந்த ஆதிகால மனிதன் சுவாசித்த மூச்சுகளில் கூட மூலிகைவாசம் கலந்திருக்கும்...! இப்போது நாம் சுவாசிக்கும் புகைக்காற்றுகளை நுகரும்போதெல்லாம் பகைத்துக்கொள்கிறேன் இந்த நகரவாழ்க்கையை...!


இப்படி இயற்கையை அழித்து அழித்து செயற்கையாக அனைத்தையும் உருவாக்கி மகிழும் நாம், இயற்கையை அழித்ததற்குண்டான தண்டனைகளை, இயற்கையானது நம்மை அவ்வபோது சுனாமி, நிலநடுக்கம் என பல சீற்றங்கள் மூலம் பழி தீர்த்துக்கொள்வதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இப்படி இயற்கையும் அழித்து நாமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போவதில் யாருக்கு என்ன லாபம் ???? எனவேதான், ஆதாம் ஏவாள் காலத்தில் பிறந்து இ(ரு)றந்திருக்கலாமென தோன்ற வைத்துவிட்டது இந்த நாகரிக நரக வாழ்க்கை.


எங்கு பார்த்தாலும் கொலை,கொள்ளை, கற்பழிப்பு என கருகிக்கொண்டுதான் கழிகிறது
இக்கலிகாலம். யார் மீது பழி சொல்வது படைத்த இறைவன் மீதா... படைத்தது இறைவன்தான் என நிரூபிக்க முடியுமா நம்மால்..? ஆனாலும் ஏதோ ஒரு சக்தி ஆள்கிறது, அதுவே அழிக்கவும் செய்கிறது என்பதை நம்பாமலும் இருக்கமுடியவில்லை. காட்டுவாசியாக வாழ்ந்த ஐந்தறிவு விலங்குகளினூடே ஆறறிவு கொண்ட அதிசயப்பிறவியாய் மனிதப்பிறவியை படைத்துவிட்டதும் அதே சக்தி தான். அந்த ஆறாம் அறிவுதான் நாகரிகம் உருவாக காரணமும் கூட. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றான் புத்தன்.. அப்படியானால் அந்த ஆசை மூலம் உண்டான நாகரிகம் கூட நம் துன்பத்திற்கு ஒரு காரணம்தானா என என்ன எண்ணத்தோன்றுகிறது... நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் இடையில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறான் மனிதன் என்கின்றனர் சில ஆன்மீகவாதிகள். அதில் எனக்கு உடன்பாடில்லை.மாறாக மாற்றக்கருத்து உண்டு. இங்கே இயற்கைக்கும் மனிதனக்கும்தான் போராட்டமே...! பசிக்காக வெறும் விலங்குகளை மட்டும் வேட்டையாடி உண்டான் ஆதி மனிதன். ஆதாம் ஏவாள் என அம்மணமாக வாழ்ந்தவன், தன் இனப்பெருக்க உறுப்புக்களை மறைப்பதற்கு ஏனோ திடீர் ஆசை கொண்டான். அந்த ஆசை தான் அந்த ஆறாம் அறிவின் மூலமந்திரம் என்பதை நாம் உணர வேண்டும். பின், மரத்தின் இலைதழைகளை உடைகளாக உடுத்தி நாகரிக வாசலைத்திறந்தான். மாமிச உணவுகளை பச்சையாக உண்டவனுக்கு அதில் சூடேற்றி சமைத்து சாப்பிட ஆசை. கற்களை கண்டறிந்து உராய்ந்து உராய்ந்து நெருப்பை மூட்டி, மாமிச உணவுகளை அத்தீயில் வாட்டி சமைத்து உண்ண ஆரம்பித்தான். இப்படியாக படிப்படியாக நாகரிகம் நன்றாக வளர ஆரம்பித்ததை நாம் அறிவோம்.


முதலில் மானம் மறைக்க மட்டுமே உபயோகிக்கப்பட்ட உடைகள், இப்போது ஸ்டைலாக உடுத்தப் பயன்படுவதும், ஓரிடத்திலிருந்து தொலைவிலிருக்கும் மற்றொரு இடத்திற்கு மனிதனும் பண்டங்களும் துரிதமாக இடம்பெயர மட்டுமே பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் ஸ்டைலாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதும், ஏன் நாம் உண்ணும் உணவு கூட ஸ்டைலாகத்தான் இருக்கிறது. இப்படி நாளுக்கு நாள் நாகரிகம் பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது.... எந்த கெட்ட நேரத்தில் மனிதன் தன் பசிக்காக, உணவு தேடி, உழைக்க ஆரம்பித்தானோ அதன்பின் தான் பஞ்சம் பஞ்சாக ப(பி)றந்திருக்கும். மனிதனுக்குள் ஏற்ற தாழ்வு பிறக்க இது கூட காரணமே...
மனிதனை மனிதனே ஆட்சி செய்யத்தொடங்குவதற்கும் இந்த ஏற்றத்தாழ்வே காரணம்.. சாதிகள் பெருகியதற்கு காரணமும்கூட.. மன்னார்கள் ஆட்சி தொடங்கி, வெள்ளையர்களிடம் அடிமை பட்டு, தற்போது சுயநல அரசியல்வாதிகளின் (கொள்ளையர்களின்) ஆதிக்கத்தில் வாழ்வதை விட, சுதந்திரமாக நமக்கு நாமே ராஜா என்ற கொள்கையில் ஆதிவாசிகளின் வாழ்க்கையை வாழ ஆசை....!

படித்தது பிடித்திருந்தால் கமெண்டில் தெரிவிக்கலாம்..
எழுத்துக்கள் என்னை விமர்சிப்பதாகக்கூட இருக்கலாம்....! நன்றி.

8 comments:

 1. மிக்க மகிழ்ச்சி சகோ நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 2. பரவாயில்லை. சிறப்பாக எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு ஒரு நூலை அறிமுகப்படுத்துகிறேன். அந்த நூல் மனித நாகரிக வளர்ச்சி, சமூகத்தின் தோற்றம் இவற்றை உள்ளடக்கிய வரலாற்றை மையமாக்க் கொண்ட நூல். அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. "வால்கா முதல் கங்கை வரை", சிந.து முதல் கங்கை வரை" . இந்த 2 நூல்களையிம் வாசியுங்கள் . நூலை வாங்கிய பிறகு என்னை தொடர்பு கொள்ளுங்கள். இன்னும் சில விடயங்களை சொல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி அக்கா. நிச்சயமாக நூல்களை வாங்கியபின் தொடர்பு கொள்கிறேன்.

   Delete
 3. எனக்கும் ஆசை பிரசாந்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா மகிழ்ச்சி ஸ்வீட்டி.... நன்றி.

   Delete
 4. Replies
  1. நன்றி சகோ மகிழ்ச்சி

   Delete