பெண்மை

பெண்மையை பற்றி எத்தனையோ மூத்த எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். கவிஞர்கள் கவிதைகளில் வர்ணிப்பு செய்திருக்கிறார்கள். இருந்தாலும், நான் பெண்மையின் வலிகளை என் வார்த்தைகளுக்குள் வலுக்கட்டாயமாக வரவழைத்த சிறுமுயற்சி இது.. இதோ இந்த இருபத்து மூன்று வயது இளைஞனின் பார்வையில், "பெண்மையின் வலியும் வலிமையும்"...!


ஆணிற்கு ஆதரவாகவும் அரவணைப்பிற்காகவும் ஆண்டவனால் அருளப்பட்ட அற்புத படைப்பு. பெண் இனம் இல்லாமல் போயிருந்தால் இன்பம் என்ற சொல் இறந்திருக்கும். ஆண்மகனிற்கு அத்தகைய இன்ப ரசத்தை உடல் மூலமாகவும், உள்ளத்தின் மூலமாகவும் ஊட்டுபவள் பெண். பெண்கள் இல்லா உலகம், பூக்கள் இல்லாத முட்செடிகளாக புதர் மண்டியிருக்கும்... மனித இனம் பெருக பெண்மையின் பங்கு பெரும்பலம். ஆண்மகனின் வீரத்திற்கு ஈடாக பெண்மனதின் ஈரமும் கிட்ட தட்ட சமநிலையைப்பெற்றிருக்கும்.


நம் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு கூட பெண்கள் ஆண்களுக்கு இணையாக போராடியிருக்கிறார்கள் என நாம் அறிவோம். ஆனால், ஒரு பெண் இந்த கலிகால சமுதாயத்தில் ஆண் என்ற போர்வையில் அலையும் சில காம மிருகங்களின் பார்வையில் கற்பை பறிகொடுக்காமல் வாழ்வதே ஒரு மாபெரும் வீரம்தான்.. இருந்தாலும், சிலந்தி வலையில் சிக்கும் சில சிறு பூச்சிகள் போல், சில பூக்கள் கருகிவிடுவதில் தான் கடவுளின் ஓரவஞ்சனை ஒழுகிவிடுகிறது.


பருவமடைந்த பின் மாதம் மாதம் பாதகம் விளைவிக்கும் மாதவிடாய் வலியை, இரத்தத்தை சிந்தி துன்பத்தை சந்திக்கிறாளே இதை விட பெரிய வலி உண்டா ? திருமணம் முடிந்தவுடன் தன் வாழ்க்கைத்துணையான ஆண்மகனுக்கு, முதன் முதலில் முதலிரவில் தன் கற்பை விருந்துவைப்பதற்காக, தன் இரு கால்களையும் விரித்து வைத்து தன் குறி காட்டுகிறாள். குறிப்புழையில் ஆண்மகன் குறி குத்தியதும், கற்பின் அடையாளமாம் கன்னிச்சவ்வு தன் யோனியின் உள்ளே கிழியும்போது வார்தைகளுக்குள் வரவைக்க இயலாத இரத்தவலியை சத்த முனகலில் தாங்குகிறாள். அதன் பலனாக பத்து மாதங்கள் கருவை சுமக்கும்போதும் வலி. அக்கரு குழந்தையாக பிறக்கும்போதும் வலி. அப்பப்பா எழுதும்போதே எட்டிப்பார்க்கிறது வார்த்தைகளில் வலி...


ஒரு ஆண்மகன் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், ஒரு பெண் தன் குழந்தையை பிரசவிக்கும் நிகழ்வை நேருக்குநேர் பார்க்க அவனுக்கு அணு அளவுகூட தைரியம் இருக்காது. ஒரு வீரம் மிக்க ஆண் கூட, அந்நிகழ்வை பார்ப்பதற்கே பயப்படுகிறான் என்றால் அந்த தாய் எவ்வளவு வலியை, தன் இரு பிளந்த கால்களின் வழியே கசியவிட்டுக்கொண்டிருப்பாள் என்பது கற்பனைக்கும் எட்டாத தூரம். துயரமும் கூட... குழந்தையை பெற்றெடுத்தவுடன் பெண்மையின் சிறப்பு முடிவதில்லை. அக்குழந்தையைச்சுற்றி பாசமென்னும் பாதுகாப்பு போட்டுவைப்பதுடன், குழந்தைக்கு சோறுட்டுவதில் இருந்து, தாலாட்டுவது வரை சீராட்டி வளர்ப்பாள் பெண். தான் இவ்வுலகத்தை விட்டு விடைபெறும் வரையிலும் அந்த பாசப்பாதுகாப்பு நீடிப்பதே தாய்மையின் உச்சம்.

இப்படியாக, ஒரு ஆணுக்கு தாயாகவும், குழந்தையாகவும், மனைவியாகவும் பல பரிணாமங்களில் பாசத்தை பரவ விடுவதில் பெண்களுக்கு நிகரில்லை. தன்னை விட அருகிலிருக்கும் அனைத்து உறவுகளுக்கு உறுதுணையாக இருக்கும் பெண்கள், ஆண்களிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பது குறைந்தபட்ச அன்பை மட்டுமே. அந்த குறைந்தபட்ச அன்பைக்கூட பல ஆண்கள் வெளிக்காட்டுவதில்லை என்பதுதான் பாவத்தின் உயரம். வேலைக்குச் செல்லும் இடத்தில் கூட ஆண் இனத்தால் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறாள்.  இவற்றையெல்லாம் கடந்து, இன்றும் பல பெண்கள் ஆண்களை விட இன்னும் ஒருபடி மேல் சாதிக்க தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் பெண்ணின் வலிமை...! 
வளர்க பெண்மை.... வாழ்க அவளின் பெருமை...!


படித்தது பிடித்திருந்தால் கமெண்டில் தெரிவிக்கலாம்..
எழுத்துக்கள் என்னை விமர்சிப்பதாகக்கூட இருக்கலாம்....! நன்றி.

கருத்துரையிடுக

5 கருத்துகள்

  1. ya very nice lines about women's bro... (4th para real lines)....

    பதிலளிநீக்கு
  2. இது வார்த்தை அல்ல , வலி! பெண்ணைப் பற்றி ஒரு ஆண் வருணித்து எழுதுவான் . அவள் வேதனையை எழுதவானா? சிலருண்டு அதில் நீயும் உண்டு. சிறப்பான பதிவு! அந்தரங்கத்தைப் பற்றி நீ எழுதியதில் வலி இருந்தது அதில் உன் எழுத்தின் வெற்றியும் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி சகோ... உங்கள் வாழ்த்துக்கள் ஒவ்வொன்றையும் என் எழுத்துக்களைத்தூண்டி விடும் ஆயுதமாகப்பார்க்கிறேன்....!

      நீக்கு
  3. உண்மையாக எழுதுகிறாய். ஆனால் கொஞ்சம் அசிங்கமாகவும் தெரிகிறது. கொஞ்சம் மிகைப்படுத்துதலாகவும் இருக்கிறது.

    இருப்பினும் மோசமான எதுவும் இல்லை. உன்னுடைய எழுத்துகள் பலரை சுடும். சிலரை எரித்துவிடும்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிரவும்