தமிழ்மணம்

Friday, August 7, 2015

குழந்தைத்தொழிலாளர்கள்குழந்தைகள் கல்வி தான் நாட்டை உயர்த்தும் என பல குரல்கள் ஓங்கினாலும் குழந்தைத்தொழிலாளர்கள் கூலி வேலை செய்யும் அவலம் இன்னும் ஓயவில்லை... நான் ஒருநாள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு மாணவனை என் பக்கத்து இருக்கையில் காணமுடிந்தது. ஏற்கனவே பள்ளிக்கு அதே பேருந்தில் சென்று வரும்போது எனக்கு பழக்கமானவன். இப்போது 13 வயதிலேயே அவன் முன்னாள் மாணவன். ஆம் பள்ளிப்படிப்பை இடைநிறுத்திவிட்டு துணிக்கடையில் வேலைசெய்கிறேன் என்றான். இருண்டது அந்த குழந்தையின் எதிர்காலம் மட்டுமல்ல. இந்தியாவின் எதிர்காலமும் தான்...! இப்படி நம் நாட்டில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்த கடையில் வேலைசெய்தாலும் தயவுசெய்து உடனே  காவல்நிலையத்தில் புகார் செய்யுங்கள். அவர்கள் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள். கற்க வேண்டிய வயதில் கற்கள் சுமக்கிறார்கள். இளமையில் "கல்" என்பதை தவறாக புரிந்துகொண்டார்களோ என்னவோ..???

No comments:

Post a Comment