தமிழ்மணம்

Monday, August 3, 2015

இருள் வாழ்கைண்ங்ள் தெரிவதில்லை,
வாசனைகள் வந்ததுண்டு,
புரிந்து கொண்டோம்,
பூத்திருக்கும் பூக்களென்று...!

கண்ணங்கள் விரிவதில்லை,
கவலைகள் கரைபுரண்டு,
அறிந்து கொண்டோம்,
வாழ்க்கை சிக்கலென்று...!


நிஜங்கள் நிலைக்கவில்லை,
நிழல்கள் தொடர்வதுண்டு
புஜங்கள் உயர்த்திகொண்டோம்
புழுக்கள்போல் வளைந்துகொண்டு...!

இடங்கள் அறியவில்லை,
தடங்கலில் தடுக்கிக்கொண்டு,
நடக்கையில் ஊன்றுகோல்கொண்டோம்,
இருகால்கள் பயந்துநின்று...!


முகங்கள் புலப்படவில்லை,
குரல்களைக் குறித்துக்கொண்டு,
அகங்களை அறிந்துகொண்டோம்,
குறைகளில் ஒழிந்துகொண்டு...!

கார்மேகம் கண்டதில்லை,
பூர்வீகம் தெரிந்துகொண்டு,
பார்வையில்லையென புரிந்துகொண்டோம்
பிறர் வானவில் ரசிக்கும்போது...!


என்றும் தமிழ்த்தாயின் மடியில் இரா.பிரசாந்த்

No comments:

Post a Comment