தமிழ்மணம்

Thursday, August 6, 2015

தேவதை


தேகங்கள் முழுதும் தேன்கூட்டில் செய்திருப்பானோ...!
மேகங்கள் கோர்த்து கார்கூந்தல் நெய்திருப்பானோ...!
நெருப்பில் பற்றிக்கொண்டு நெற்றி சிலைத்திருப்பானோ...!
கருப்பில் வில்ரெண்டு புருவங்கள் வளைத்திருப்பானோ...!
முகடுகள் மூலம் மூச்சு முட்ட மூக்கை சமைத்திருப்பானோ...!
மின்தகடுகள் பொருத்தி உதடுகள் அமைத்திருப்பானோ...!
பூமேடை போட்டு தாடை இருத்திருப்பானோ...!
கழுத்தை துளைத்து சங்கு பொருத்திருப்பானோ...!
மாம்பழத்தை பறித்து இரு முலைகள் பதித்திருப்பானோ...!
இடைவேளையில் இடை செய்ய இந்திரலோகம் சென்றிருப்பானோ...!
சிறுபிழையில் பாதியிலே முற்றுப்புள்ளி வைத்து தொப்புள் என்றிருப்பானோ...!
மன்மதக்கலை பயின்று மதனமேட்டில் பள்ளம் தோண்டிருப்பானோ...!
பின்புறம்சிலை அமைக்க முயன்று விண்வெளி தாண்டிருப்பானோ...!
சந்தனமரங்களை வெட்டி தொடைகளைத் தீட்டிருப்பானோ...!
மந்திரங்களைக்கொட்டி கால்களும் கைகளும் நீட்டிருப்பானோ...!
விடைத்து துடிக்கும் விரல்களை  மூங்கிலில் முடைந்திருப்பானோ...!
படைத்து முடித்த பின் பிரம்மனும்
வியந்திருப்பானோ...!

No comments:

Post a Comment