தமிழ்மணம்

Friday, August 7, 2015

தன்னம்பிக்கை


ன்னம்பிக்கையை தண்ணீரூற்றி வளர்த்துவிடு...!
வாழ்க்கையில் செடிகள் போல செழித்துவிடு...!
தோல்விகளை
தலைதெறிக்க துரத்திவிடு...!
வெற்றிகளை தலைதூக்கி துவக்கிவிடு...!
எறும்பாக எட்டுத்திக்கும் உழைத்துவிடு...!
கரும்பாக தித்திக்கும்
சுவைத்துவிடு...!
நீ சூரியனாய் எதிரிகளை எரித்துவிடு...!
நிலவில் உன் பெயரை பொறித்துவிடு...!
பொறாமையை குழிதோண்டி புதைத்துவிடு...!
இயலாமையை காலால் எட்டி உதைத்துவிடு...!
இருளில் மின்னலாய் ஒளித்துவிடு..!
பகலில் பனியாய் பனித்துவிடு...!
வண்ணங்களை வானவில்லாய் வளைத்துவிடு...!
எண்ணங்களை பசும்வயலில் விளைத்துவிடு...!
புயல்போல் வீசி புறப்படு...!
வானமே இவனுக்கு வசப்படு...!

2 comments:

  1. அருமையான தன்னம்பிக்கையூட்டும் கவிதை...புதுகை வலைப்பதிவர் விழாவில் வருகையை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி....விழாக்குழுவினர் சார்பில்....www.velunatchiyar.blogspot.com-thendral

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி... நன்றி நன்றி நன்றி !

      Delete