தமிழ்மணம்

Thursday, September 10, 2015

10 வது மதுரை புத்தகக்கண்காட்சியில் நான்...

புத்தகங்கள் என்றாலே வெறும் வாசிக்க மட்டும் அல்ல. நாம் இந்த உலகத்தை நேசிக்கவும், பல நல்ல விஷயங்களை சுவாசிக்கவும் நமக்கு கற்றுத்தரும் ஒரு மிகச்சிறந்த ஆசான். இன்றைய சூழலில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் நம் இளைஞர்களிடையே மிக மிக மிகக்குறைந்துவிட்டது. பல புத்தகக்கண்காட்சியில் கூட்டம் கூட்டமாக இளைஞர்களைக்காண முடியும். ஆனால் அவர்களின் புத்தகத்தேர்வு, பள்ளி கல்லூரிகளில் உள்ள பாடங்களைச்சார்ந்தே அமைகிறது. அதுவல்ல நல்ல புத்தக வாசிப்பு. இலக்கியங்கள், நாவல்கள், கதைகள், கவிதைகள், வரலாறு, அறிவியல், சமகால பிரச்சினைகள் என அனைத்தையும் தன்னகத்தே தாங்கி நிற்கும் புத்தகங்களை புரட்ட வேண்டும். அதுவே நம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவும். இவ்வுலகை நமக்குப்புரியச்செய்யும். புத்தகம் என்பது வெறும் அச்சிட்ட காகிதங்கள் அல்ல, இவ்வுலகில் ஆதிமுதல் இப்பொழுதுவரை மனிதன் சந்தித்தவைகள், கடந்துவந்த பாதைகள், அனுபவங்கள், ஏமாற்றங்கள், இன்பங்கள் துன்பங்கள், எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என பலவற்றை நமக்குச் சொல்கிற ஓர் உன்னத படைப்பு. உங்களைப் புத்தகத்தின் மூலம் சந்திக்கும் அந்த மனிதர்கள் பழங்கால மனிதர்களாகவும் இருக்கலாம் அல்லது சமகால மனிதர்களாகவும் இருக்கலாம். அது நீங்கள் படிக்கும் புத்தகங்களைப்பொருத்தது.


தற்போது மதுரையில் நடைபெற்ற 10 வது
புத்தகக்கண்காட்சியில் கலந்து கொண்டு சில புத்தகங்கள் வாங்கி வந்தேன். அதன் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். அந்த புத்தகங்களை முழுதும் படித்துவிட்டு அவற்றைப்பற்றிய விமர்சனங்களையும் எழுத உள்ளேன். நன்றி...


இதோ நான் வாங்கிய புத்தகங்கள் :

1.சிற்பியே உன்னை செதுக்குகிறேன் (வைரமுத்து)
2.ஜீரோ டிகிரி (சாரு நிவேதிதா)
3.நான் ஏன் என் தந்தையைப்போல் இல்லை (இரா.நடராஜன்)
4.ஆயிஷா (இரா.நடராஜன்)
5.காதல் ஆத்திச்சூடி(தபூ சங்கர்)
6.மலாலா - கரும்பலகை யுத்தம் (இரா.நடராஜன்)
7.ஹைக்கூ ஓர் அறிமுகம்(சுஜாதா)
8.பிரபாகரன் (செல்லமுத்து குப்புச்சாமி)
9.இதுவரை நான் (வைரமுத்து)
10.ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க (நீயா நானா-கோபிநாத்)
11. என் ஜன்னலின் வழியே (வைரமுத்து)

விமர்சனங்கள் விரைவில்....!

No comments:

Post a Comment