தமிழ்மணம்

Friday, October 2, 2015

பூமித்தாயின் நலமே, நம் நலமெனக் காக்க வாரீர்...!


சுற்றுச்சூழல் பாதிப்பு தரும் ஆபத்து:

                    நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில், நாமும் எதிர்கால தலைமுறையும் நலமுடன் வாழ வேண்டுமெனில் சுற்றுச்சூழலை  பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியம். பூமி மாசடைவு இன்று உலக நாடுகளையே அச்சுறுத்தும் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. எனவே உலகநாடுகள் ஒன்று சேரந்து ஆண்டுதோறும் ஜீன் 5ம் நாள் உலக சுற்றுச்சூழல் தினத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. பூமியின் வெப்பம் உயரந்து, மழைப்பொழிவு குறைந்து நிலத்தடி நீரும் குறைந்து,
விவசாயமும் குறைந்துவிட்டது. நம் தேவைக்கு காடுகளை இயற்கை வளங்களையும் அழித்துவிட்டோம். இப்படி இயற்கையை அழித்து நாமும் அழிந்து போவதில் யாருக்கென்ன லாபம். சூரியனின் புற ஊதாக்கதிர்களின் தாக்குதலிலிருந்து நம்மைப்பாதுகாக்கும் கவசமான ஓசோன் படலத்தின் அடர்த்தியும் குறைந்து விட்டது. இதனால் பல ஆபத்தான நோய்களின் எண்ணிக்கைகயும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அன்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி, கடல்நீர்மட்டம் உயர்ந்து பேராபத்தை விளைவிக்கின்றன.  இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பூமியில் உயிரினங்கள் வாழ முடியாத நிலை உருவாகிவிடும். எனவே தான் நம்மால் முடிந்த அளவு சுற்றச்சுழல் பாதிப்பை தவிர்க்க வேண்டும். எப்படி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது? எப்படி அப்பாதிப்பைக்குறைத்து பூமியைப்பாதுகாப்பது? என்றும் பார்ப்போம்.

காற்று மாசடைதல் :
                 பல்வேறு வகையான வேதியம் சார்ந்த பொருட்களாலும், நச்சுப்புகைகளாலும், தூசியும் வளிமண்டலத்துக்கு வெளியேற்றப்படுவதன் மூலம் காற்று மாசடைகின்றது. இப்போதுள்ள போக்குவரத்து ஊர்திகளாலும், தொழிற்சாலைகளாலும் வெளிவிடப்படும் கார்பன் மோனாக்சைடு, கந்தக ஈராக்சைடு, குளோரோ புளோரோ கார்பன்கள், நைட்ரசன் ஆக்சைடுகள் போன்றவைகளும் காற்றை மாசுபாடுத்துகின்றன.

நீர் மாசடைதல் :
                  தொழிற்சாலைகள், வேளாண் நிலங்கள், வேளாண் பண்ணைகள், நகர்ப்புறக் கழிவுகள் முதலியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் ஆறுகளிலும், வடிகால்களிலும், வேறு நீர்நிலைகளிலும் கலந்துவிடுவதால் நீரின் தரமும், நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் புவியின் நீர்வளங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் வளிமண்டலத்தில் கலக்கும் மாசுகள் மழைநீருடன் கலந்து நிலத்தை அடைகின்றன. இவை நீருடன் நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும், ஆறுகள், குளங்கள் முதலியவற்றையும் மாசுபடுத்துகின்றன. எனினும் இவை முன் குறிப்பிட்டவற்றை விட குறைந்தளவிலேயே பாதிப்பைத் தருகின்றன.

மண் மாசடைதல் :
                 இதற்கும், தொழிற்சாலைக் கழிவுகள் முக்கிய காரணிகளாக இருப்பினும், தற்கால வேளாண்மை முறைகளும் மண்மாசடைதலுக்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றன எனலாம். வேதியியல் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் முதலியவற்றின் பெருமளவிலான பயன்பாட்டினால் மண் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கதிரியக்க மாசு :
                 அணு மின்சார உற்பத்தி, அணு ஆயுத ஆராய்ச்சிகள், அணு ஆயுத உற்பத்தி போன்ற இருபதாம் நூற்றாண்டு நிகழ்வுகளால் கதிரியக்கக் கழிவுகள் உருவாகி சூழல் மாசடைகிறது.

ஒலியினால் மாசு :
                சாலைகளில் ஏற்படும் வண்டி ஒலி, வண்டி ஒலிப்பான்களால் ஏற்படும் மிகுதியான ஒலி, வானூர்தியின் ஓசை முதலியவற்றால் ஏற்படுகிறது.

ஒளியினால் மாசு :
                     ஒளி அத்துமீறுகை, அதிகப்படியான ஒளியூட்டம்,வானியல்சார் குறுக்கீட்டு விளைவு போன்றவை இவ்வகை மாசில் அடங்கும்.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு :
          1.முதலில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
          2.வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறைகளை அமல்படுத்த வேண்டும்.
          3.வீடுகள், அலுவலகங்களில் குறைந்தது 2 மரங்களையாவது வளர்க்க வேண்டும்.
          4.பயணங்களுக்கு சொந்த வாகனங்களை தவிர்த்து, பேருந்தை பயன்படுத்த முயலவேண்டும்.
          5.கடைகளுக்கு செல்லும் போதே துணிப்பை எடுத்துச் சென்றால், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கலாம்.
          6.குண்டு பல்புகளுக்கு பதிலாக "சி.எப்.எல்.,' "எல்.இ.டி.,' பல்புகளை பயன்படுத்தவேண்டும்.
          7.வீட்டிலிருந்து புறப்படும் முன், மின்சாதன பொருட்கள் "சுவிட்ச்-ஆப்' செய்யப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
          8.மரம் மற்றும் கிரானைட் கற்களால் செய்யப்படும் பொருட்களை குறைத்துக் கொள்ளவேண்டும்.
          9. சூரிய சக்தியில் இயங்கும், சோலார் உபகரணங்களையும், "வாட்டர்-ஹீட்டர்'களையும் பயன்படுத்தவேண்டும்.
          10.கடிதம் எழுதுவதை விட, இ-மெயில் மூலமான தொடர்புகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
          11.ஸ்பிரே பெயின்ட்களுக்கு பதில், பிரஷ்களையோ, ரோலர்களையோ பயன்படுத்தலாம்.

இது போல ஒவ்வொருவரும், அன்றாட வாழ்க்கை முறையில் மாறுதல்களை செய்வதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பதன் மூலம் நம் பூமியைப்பாதுகாத்து நாமும் நலமுடன் வாழ்ந்து, நம் சந்ததிகளும் நலமுடன் வாழலாம்.

உறுதிமொழி:
இக்கட்டுரையானது,
      "வலைப்பதிவர் திருவிழா - 2015" மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காகவே எழுதப்பட்டது.
சுற்றச்சுழல் விழிப்புணர்வு (வகை-2)
எனும் தலைப்பிற்காக எழுதப்பட்டது.
மேலும் இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடமாட்டேன்  என்றும் உறுதி கூறுகின்றேன். நன்றி...!

3 comments:

 1. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  http://dindiguldhanabalan.blogspot.com

  ReplyDelete
 2. மிக்க நன்றி ... மகிழ்ச்சி...!

  ReplyDelete
 3. தன்னுடைய பிறப்பைக் குறித்து ஒருவன் பெருமையடையவோ அல்லது சிறுமையடையவோ தேவையில்லை. ஆனால் உங்களுக்கு உங்களுடைய இனத்தை குறித்து இருக்கும் அஹங்காரத்தை குறித்து நீங்கள் சிறுமையடையத்தான் வேண்டும். பெருமை இருக்கலாம். திமிர் கூடாது.

  ReplyDelete