தமிழ்மணம்

Friday, October 2, 2015

புண்பட்ட கலாச்சாரத்திற்கு பண்பாடென்னும் மருந்து தேவை...!மதச்சார்பற்ற நாட்டில் மதக்கலவரங்கள் மடியவே தேவை  நம் பண்பாடு...!

கலாச்சார சீர்கேட்டை தடுத்து நல்ல சமூகம் மலரவே தேவை நம் பண்பாடு....!

உயிர்களிடத்தில் அன்பெனும் மரம் உயர்ந்து வளரவே, உரமாய் தேவை நம் பண்பாடு...!

மனிதனிடத்தில் உள்ள மிருகம் தொலைத்து நல்ல மனிதம் சிறக்கவே தேவை நம் பண்பாடு...!

மனிதகுலத்தில் தீவிரவாதத் தீயை அணைத்து அழிக்கவே, அதற்கு தேவை நம் பண்பாடு...!

தமிழ்மொழி அடையாளம் அழிக்க வரும் பிறமொழிகளைத் துரத்தவே, தேவை நம் பண்பாடு...!

முன்னேறிய உலகில் தாய் தந்தையரை முதியோர் இல்லம் சேர்க்கும் மூடர்களுக்கே தேவை நம் பண்பாடு...!

கூடிவாழும் கூட்டுக்குடும்பம் துறந்து
தனித்து வா(ட)ழ தனிக்குடும்பம் செல்லும் தம்பதிகளுக்குத்தேவை நம் பண்பாடு...!

நிமிடத்திற்கு நிலைமாறும் உலகில் நொடிக்கு நொடி போதையில் தடுமாறும் பல இளைஞர்களுக்குத் தேவை நம் பண்பாடு...

பெண்சுதந்திரம் என்று அரைகுறை ஆடை அணிந்துசென்று உடலைக் காட்சிப்பொருளாக்கும் சில பெண்களுக்குத்தேவை நம் பண்பாடு...!

தமிழனின் வீரமும் ஈரமும் விருந்தோம்பலும், இப்பெருமைகள் இவ்வுலகறியத் தேவை நம் பண்பாடு...!

தமிழ் கலாச்சாரம் உணர்ந்து, உலகுக்கு உரைத்து தமிழனே... நீ பாரதப் 'பண்'பாடு..!

உறுதிமொழி:
இக்கட்டுரையானது,
      "வலைப்பதிவர் திருவிழா - 2015" மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காகவே எழுதப்பட்டது.
வகை(4) - புதுக்கவிதைப்போட்டி
எனும் தலைப்பிற்காக எழுதப்பட்டது. 
மேலும் இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடமாட்டேன்  என்றும் உறுதி கூறுகின்றேன். நன்றி...!

4 comments:

 1. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  http://dindiguldhanabalan.blogspot.com

  ReplyDelete
 2. விழாக்குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி...!

  ReplyDelete
 3. வணக்கம்! கவிதை அரும்மையாக உள்ளது!

  வாழ்த்துக்கள்! நன்றி

  ReplyDelete
 4. மிக்க நன்றி சகோ. மகிழ்ச்சி !

  ReplyDelete