தமிழ்மணம்

Friday, August 7, 2015

தன்னம்பிக்கை


ன்னம்பிக்கையை தண்ணீரூற்றி வளர்த்துவிடு...!
வாழ்க்கையில் செடிகள் போல செழித்துவிடு...!
தோல்விகளை
தலைதெறிக்க துரத்திவிடு...!
வெற்றிகளை தலைதூக்கி துவக்கிவிடு...!
எறும்பாக எட்டுத்திக்கும் உழைத்துவிடு...!
கரும்பாக தித்திக்கும்
சுவைத்துவிடு...!
நீ சூரியனாய் எதிரிகளை எரித்துவிடு...!
நிலவில் உன் பெயரை பொறித்துவிடு...!
பொறாமையை குழிதோண்டி புதைத்துவிடு...!
இயலாமையை காலால் எட்டி உதைத்துவிடு...!
இருளில் மின்னலாய் ஒளித்துவிடு..!
பகலில் பனியாய் பனித்துவிடு...!
வண்ணங்களை வானவில்லாய் வளைத்துவிடு...!
எண்ணங்களை பசும்வயலில் விளைத்துவிடு...!
புயல்போல் வீசி புறப்படு...!
வானமே இவனுக்கு வசப்படு...!

குழந்தைத்தொழிலாளர்கள்



குழந்தைகள் கல்வி தான் நாட்டை உயர்த்தும் என பல குரல்கள் ஓங்கினாலும் குழந்தைத்தொழிலாளர்கள் கூலி வேலை செய்யும் அவலம் இன்னும் ஓயவில்லை... நான் ஒருநாள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு மாணவனை என் பக்கத்து இருக்கையில் காணமுடிந்தது. ஏற்கனவே பள்ளிக்கு அதே பேருந்தில் சென்று வரும்போது எனக்கு பழக்கமானவன். இப்போது 13 வயதிலேயே அவன் முன்னாள் மாணவன். ஆம் பள்ளிப்படிப்பை இடைநிறுத்திவிட்டு துணிக்கடையில் வேலைசெய்கிறேன் என்றான். இருண்டது அந்த குழந்தையின் எதிர்காலம் மட்டுமல்ல. இந்தியாவின் எதிர்காலமும் தான்...! இப்படி நம் நாட்டில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்த கடையில் வேலைசெய்தாலும் தயவுசெய்து உடனே  காவல்நிலையத்தில் புகார் செய்யுங்கள். அவர்கள் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள். கற்க வேண்டிய வயதில் கற்கள் சுமக்கிறார்கள். இளமையில் "கல்" என்பதை தவறாக புரிந்துகொண்டார்களோ என்னவோ..???

Thursday, August 6, 2015

தேவதை


தேகங்கள் முழுதும் தேன்கூட்டில் செய்திருப்பானோ...!
மேகங்கள் கோர்த்து கார்கூந்தல் நெய்திருப்பானோ...!
நெருப்பில் பற்றிக்கொண்டு நெற்றி சிலைத்திருப்பானோ...!
கருப்பில் வில்ரெண்டு புருவங்கள் வளைத்திருப்பானோ...!
முகடுகள் மூலம் மூச்சு முட்ட மூக்கை சமைத்திருப்பானோ...!
மின்தகடுகள் பொருத்தி உதடுகள் அமைத்திருப்பானோ...!
பூமேடை போட்டு தாடை இருத்திருப்பானோ...!
கழுத்தை துளைத்து சங்கு பொருத்திருப்பானோ...!
மாம்பழத்தை பறித்து இரு முலைகள் பதித்திருப்பானோ...!
இடைவேளையில் இடை செய்ய இந்திரலோகம் சென்றிருப்பானோ...!
சிறுபிழையில் பாதியிலே முற்றுப்புள்ளி வைத்து தொப்புள் என்றிருப்பானோ...!
மன்மதக்கலை பயின்று மதனமேட்டில் பள்ளம் தோண்டிருப்பானோ...!
பின்புறம்சிலை அமைக்க முயன்று விண்வெளி தாண்டிருப்பானோ...!
சந்தனமரங்களை வெட்டி தொடைகளைத் தீட்டிருப்பானோ...!
மந்திரங்களைக்கொட்டி கால்களும் கைகளும் நீட்டிருப்பானோ...!
விடைத்து துடிக்கும் விரல்களை  மூங்கிலில் முடைந்திருப்பானோ...!
படைத்து முடித்த பின் பிரம்மனும்
வியந்திருப்பானோ...!

Wednesday, August 5, 2015

காமம்



போர்வைக்குள் போர்தொடுக்க...
வியர்வைகள் வியர்த்தெடுக்க...
முத்தத்தில் தொடங்கி,
முதுகுத்தண்டில் முடங்கி, 
குறியை குச்சி ஐஸ் போல் வாயிலிட்டு குதப்புகிறாய்...!
குறிக்கோள் தான் என்னவோ..பதில் கேட்டால் பிதப்புகிறாய்...!
குறி உருகும் முன் உனக்குள்ளே விட்டுவிடு...!
நீயும் உச்சத்தை தொட்டுவிடு...!
உன் முன்னிரு கனிகள் தந்து கிரங்கவைக்கின்றாய் மோகத்தில்...!
என் பின்னிரு தனங்கள் இழுத்து இயங்கச்செய்கின்றாய் வேகத்தில்...!
உள்ளே வெளியே ஆட்டத்தின் முடிவில், திரவ வடிவில் காமம் உருகியது உனக்குள்...!
மெல்ல மெல்ல உல்லாச உழைப்பில், சுகத்தின் களைப்பில்,  கண்கள் சொக்கியது எனக்குள்...!

Monday, August 3, 2015

இருள் வாழ்கை



ண்ங்ள் தெரிவதில்லை,
வாசனைகள் வந்ததுண்டு,
புரிந்து கொண்டோம்,
பூத்திருக்கும் பூக்களென்று...!

கண்ணங்கள் விரிவதில்லை,
கவலைகள் கரைபுரண்டு,
அறிந்து கொண்டோம்,
வாழ்க்கை சிக்கலென்று...!


நிஜங்கள் நிலைக்கவில்லை,
நிழல்கள் தொடர்வதுண்டு
புஜங்கள் உயர்த்திகொண்டோம்
புழுக்கள்போல் வளைந்துகொண்டு...!

இடங்கள் அறியவில்லை,
தடங்கலில் தடுக்கிக்கொண்டு,
நடக்கையில் ஊன்றுகோல்கொண்டோம்,
இருகால்கள் பயந்துநின்று...!


முகங்கள் புலப்படவில்லை,
குரல்களைக் குறித்துக்கொண்டு,
அகங்களை அறிந்துகொண்டோம்,
குறைகளில் ஒழிந்துகொண்டு...!

கார்மேகம் கண்டதில்லை,
பூர்வீகம் தெரிந்துகொண்டு,
பார்வையில்லையென புரிந்துகொண்டோம்
பிறர் வானவில் ரசிக்கும்போது...!


என்றும் தமிழ்த்தாயின் மடியில் இரா.பிரசாந்த்

Sunday, August 2, 2015

திருநங்கைகளும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளும்

திருநங்கைகளா? யாரிவர்கள்?  எப்படி எங்கிருந்து பிறந்தார்கள்..? மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து ஆண்,பெண் என இரு உயிர்கள்தானே இருந்துவந்தது. இடையில் எங்கிருந்து வந்தார்கள் இவர்கள்? சிவனே ஆணும் பெண்ணுமாய் கலந்து அர்த்தநாதீஸ்வரராக  அவதாரம் பூண்டார் என சாஸ்திரங்கள் கூறுகிறது.


இவர்கள் பிறப்பிலேயே திருநங்கைகளாக பிறப்பதில்லை. அவர்கள் வளரும்போதுதான் வளர்கிறது இந்த பிரச்சினையும்.. இதற்கு அவர்களின் பருவ நேரத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றமே காரணம். குறிப்பாக ஆண்களுக்கு, பெண்களின் ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதும், பெண்களுக்கு, ஆண்களின் ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதுமே தான் மூலக்காரணம். பருவகாலங்களில் இந்த மாற்றத்தில் பாவிக்கப்பட்டவர்களின் பாவனைகளை கண்கூடாக கவனிக்கலாம்.


சரி, இனி இவர்களின் பிரச்சினைகளை பார்ப்போம். பள்ளிப்பருவத்திலேயே இவர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள். பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். இப்படி, உள்ளத்தின் ரீதியாகவும், உடலின் ரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளத்துணிவில்லாமல் கடைசியில் உயிரை விடத்துணிகிறார்கள். பெண்களுக்கே பாதுகாப்பில்லாத இச்சமூகத்தில் ஒரு திருநங்கை வாழ்வது அவ்வளவு சுலபமா? மாற்றத்திறனாளிகளை விட போற்றிப்பாதுகாக்கப்படவேண்டியவர்கள் இவர்கள்தான். ஏனென்றால் உடலால்மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றத்தினாளிகள், ஆனால் திருநங்கைகள் உள்ளத்தாலும் பாத்க்கப்பட்டவர்கள். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, வீட்டில் பெற்றோர்களால் துரத்தப்பட்டு, நிம்மதியிழந்து, நித்திரையிழந்து பாதுகாப்பு தேடி அலையும் அரவாணிகள் ஆயிரம். பண நெருக்கடிக்காக பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள். சிலர் பிச்சையெடுக்கும் அவலமும் அரங்கேறுகிறது. அதைக்காணும் நமக்கு சாதரணமாகவும், கேலியாகவும் மட்டும் தெரியுமே தவிர, அச்சுமைகளை சுமக்கும் வலி அவர்களுக்கு மட்டுமே புரியும். எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட அரவாணிகளுக்கு அவர்கள் மட்டுமே அரவணைப்பு.


உண்மையான அன்பையும் ஆதரவையும் தேடும் இவர்களுக்கு, அந்த அன்பும் ஆதரவும் கிடைக்கப்பெற்றால் பன்மடங்கு பாசமிக்கவர்களாய் விளங்குவார்கள். இவர்களால் குழந்தைகள் பெற்றக்கொள்ள முடியாதே தவிர, ஒரு தாய்க்கு ஈடான பாச்தைக்கொடுக்கமுடியும். அவர்களுக்கும் காதல்,காமம்,ஆசை,கோபம்,கனவு,லட்சியம் என உணர்வுகள் உண்டு என்பதை நாம் உணரந்துகொள்ளவேண்டும். அவர்களை ஒருபோதும் ஒதுக்கிவிடக்கூடாது. மற்ற நாடுகளைவிட, இந்தியாவில்தான் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம். நம்மைப்போன்ற அதிசயப்பிறவிகளால் கிண்டலும் கேலியும் தாராளம். இனியாவது திருந்தப்பார்ப்போம் தீர்க்கப்பிறவிகளே...! அவர்களுக்கான தீர்வு இட ஒதுக்கீட்டுடன் ஒதுங்கிவிடுவதல்ல. அவர்கள் குரலும் சமூகத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்பதே.


பள்ளிக்கூடத்திலே இவர்கள் ஒதுக்கப்படாதவாறு, சக மாணவர்களுக்கு இதைப்பற்றி அறிவியல் ரீதியாக தெளிவான புரிதலைக் கொண்டுவரவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் கேலி கிண்டலுக்குள்ளாவதை, ஒரு நல்ல புரிதலின் அடிப்படையில் ஆரம்பத்திலேயே தடுக்க முடியும். மற்றும் சமூகத்தில் ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவேண்டுமானால் அவர்கள் அரசியலுக்குள் நுழைந்தால் மட்டுமே இது சாத்தியம். நாம் அவர்களுக்கு வாக்களிக்கத் தயங்கக்கூடாது. பெண்களுக்கு சாதகமான அனைத்து சட்டங்களும் இவர்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கெதிரான குற்றங்கள் குறையும். இப்பொழுது அவர்களும் பெரிய பெரிய பதவிகளில் வலம் வரத்தொடங்கிவிட்டார்கள்.


"வெல்லட்டும் திருநங்கைகள் இன்று... ஊர் சொல்லட்டும் வீரமங்கைகள் என்று...!" அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..! என்றும் தமிழ்த்தாயின் மடியில், இரா.பிரசாந்த்.