கணவன் மனைவி கவிதைகள் | Husband and wife kavithaigal
மூணு முடிச்சு போட்டதுமே முந்தானையில என்னை முடிஞ்சு போட்டவளே...!
ஆண்குழந்தை தான் வேணும்னு அடம்புடிச்சு கேட்டவளே...!!
கோபத்தில நான் இருந்தா கொஞ்சி சமாதானம் செஞ்சவளே...!
கொஞ்சல் பார்வையில தான் கொன்னுபுடுவா என் நெஞ்ச...!
கோழிக்கொழம்பு சமையலில யாருமில்ல அவள மிஞ்ச..!!
பட்டு புடவை கட்டி நீ நடந்து வந்தா
எனக்குள்ள பட்டாசு வெடிக்குமடி..!
வெங்காயம் வெட்டயில வெரல நீயும் வெட்டி கிட்டா என் மனசு துடிக்குமடி..!!
நான் செஞ்ச தவத்துக்கு வரமா வந்தவளே...!
தாலி ஒன்னு நான் கட்ட தன்னையே தந்தவளே...!!
எப்பொழுதும் என்னை விட்டுக்கொடுக்காம பேசுபவளே...!
கண்ணுல தான் முப்பொழுதும் காதல் ஒளி வீசுபவளே...!!
நேசத்தில உன்னை மிஞ்ச யாருமில்ல இந்த தேசத்தில...!
தாயை மிஞ்சிய தாரம் நீ தானே..!!
உன் பாசத்தை தூக்கி சுமக்கும் பாரம் நான் தானே...!!
அடுத்த ஜென்மத்திலும் நீ தான் எனக்கு பொண்டாட்டியா வரணும்...!
நான் உனக்கு அப்போதும் அன்பு தொல்லை தரணும்...!!
Tamil Kavithaigal
Kavithaigal in tamil
Tamil kadhal kavithaigal
0 கருத்துகள்
உங்கள் கருத்துக்களை பகிரவும்