✍🏻 கண்ணுமுழிச்ச நேரத்திலும்
உன் கனவு வந்து கதைக்குதடி...!
தூரத்திலும் உன்னைக்காண்டா
என் இதயம் இடம்மாறி குதிக்குதடி...!!
எப்போதும் உன் நெனப்பு
எம் பொழப்ப கெடுக்குதடி...!
அது கொலையேதும் செய்யாம
என் உசுர எடுக்குதடி...!!
மான்விழி கண்ணுரெண்டும்உன் மச்சானை மயக்குதடி...!
தேன்மொழி உன்னைக்கண்டா என் புருவம் ரெண்டும் வியக்குதடி...!!
உன் பட்டாம்பூச்சி பார்வையெல்லாம்
எனக்குள்ள பட்டாபோட பாக்குதடி...!
உன் மூச்சு பட்டுபுட்டா என் வியர்வையெல்லாம்
சொட்டுசொட்டா வேர்க்குதடி...!!
நான் வச்ச ரோஜா செடி
உனக்காக தான் பூக்குதடி..!
ஒரு நாள் உன்னை காணமுன்னா
எங்கனு தான் கேட்குதடி...!!
என் கால்ரெண்டும் ஒன்னத்தேடி அனிச்சையா செல்லுதடி...!
ஏன்னு நானும் கேட்டா அதுரெண்டும் உன்பேரைச்சொல்லுதடி...!!
தூண்டில் மீனைப்போல உங்கிட்ட மாட்டிகிட்டு எம்மனசு துள்ளுதடி...!
எங்கிட்ட கேட்டுபுட்டு உன் காதல்
என்னையும் தான் கொல்லுதடி...!!
உன் பேரை உச்சரிச்சா என் உள்ளமெல்லாம் உருகுதடி...!
என்னை கடந்து
நீயும் போனா என் இதயமெல்லாம் கருகுதடி...!!
உதட்டழகி நீ சிரிச்சா
என் உள்ளுக்குள்ள சிலிர்க்குதடி...
கட்டழகி நீ கண்ணசைச்சா
என் காதல் செடி துளிர்க்குமடி...!!
நித்தமும் உனக்கும் எனக்கும் தான் காதல் யுத்தம் நடக்குதடி...!
தோற்றாலும் பரவால்லனு என் நெஞ்சம் கிரங்கிப்போய் கிடக்குதடி...!!
காதல் கவிதைகள் - Tamil love Kavithaigal
0 கருத்துகள்
உங்கள் கருத்துக்களை பகிரவும்