Tamil love Kavithaigal |
காதலித்துப்பார்!
உன் கால்களுக்கும் காதலியின் வீட்டிற்கும் இடையில் காந்தப்புலம் உண்டாகும்...!!
காதலியின் பெயர் சொல்லி உன் அலைபேசி அழைத்தால் உனக்குள் அலையடிக்கும்.. காதலித்துப்பார்...!!
வீடியோ காலில் விடிய விடிய விழித்துக்கிடப்பாய்..!!
வாட்ஸ் அப்பில் வாழ்க்கையே நடத்திமுடிப்பாய்...!
முதன்முதலாக வெட்கம் எட்டிப்பார்க்கும்...!
காதலித்துப்பார்..!!
பசி மறப்பாய்
ருசி இழப்பாய்
காதலியின் முகத்தை மட்டுமே ரசித்துக்கிடப்பாய்...!! காதலித்துப்பார்..!!
உன் இதயத்துடிப்பு உனக்கு இசையாய் கேட்கும்...!
காதலியின் பெயர் உனக்கு தேசியக்கீதமாகும்...!!
முதன்முதறையாக
உன்னை ஆணழகனாய் உணர்வாய்...!
காதலித்துப்பார்..!!
பூக்களை புதிதுபோல் பார்ப்பாய்...!
நட்சத்திரங்களை எண்ண முயல்வாய்..!!
அமாவாசை அன்று கூட நிலவை தேடுவாய்..!!
காதலித்துப்பார்..
இரவுகளை "கருநிற பகல்" என்பாய்...!
பகல்களை "வெண்ணிற இரவு" என்பாய்..!!
உன் கண்களுக்கு கூட தாகம் எடுக்கும்..!
பின் காதலியை கண்டவுடன் தாகம் அடங்கும்..!!
வானம் உன்னை நெருங்கும்..!
உன் சொர்க்கம் சுடிதாருக்குள் சுருங்கும்...!காதலித்துப்பார்..!!
Tamil love Kavithaigal
0 கருத்துகள்
உங்கள் கருத்துக்களை பகிரவும்