பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்




பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் | Birthday wishes kavithaigal


பூக்களும் உன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது..
நீ பிறந்த தினத்தில் தான் அவைகளும் பிறந்தனவாம்...!

வைரம் உருவாக பல வருடங்கள் ஆகுமாமே...
நீ மட்டும் எப்படி பத்தே மாதத்தில்...!?

பிரம்மனும் பிரம்மித்திருப்பான் உன்னை படைத்த அடுத்த நொடியே...!

நீ பிறந்த தினத்தை தவிர மற்ற தினங்களெல்லாம் சோகம் கொண்டது...!
நீ அந்த தினத்தில் பிறக்கவில்லை என்று...!!

பூமிக்கு இரண்டு நிலவுகள்...!
ஆம்.. நீ பிறந்த நாளில் இருந்து...!!

சொர்க்கத்திற்கு இன்று விடுமுறையாம்...!
தேவதை பிறந்தநாளாம் இன்று...!

பிரம்மனின் கற்பனைவளம் முழுவதும் தீர்ந்த நாள்...
பெண்ணே உன் பிறந்தநாள்...!

Tamil Birthday kavithaigal

Birthday kavithaigal for lover

Birthday wishes in tamil


கருத்துரையிடுக

0 கருத்துகள்