Kavithaigal in tamil |
அவள் சூடும் பூக்களுக்கு மட்டும் ஆயுள் காலம் அதிகம்...
ஆம், அவை செடியில் இருப்பதைவிட அவள் தலைமுடியில் இருக்க ஆசைப்படுவதால்...!
தேவதைகள் வெள்ளை உடையில் தான் வலம் வருவார்கள் என்ற கட்டுக்கதைகளை உடைத்துவிட்டு, இதோ கருப்புநிற சுடிதாரில் கையசைத்துக்கொண்டு வருகிறாள்...!
உன் கைக்கடிகாரத்திற்கும் உன்மேல் காதல் வரக்கூடும்..
நீ கைக்கடிகாரத்தின் காதை திருகி நேரம் சரி செய்யும் பொழுதெல்லாம் ..!
உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே, வண்ணத்துப்பூச்சிகள் தேன் உறிஞ்ச சிரமப்படுவதாக புகார் செய்கின்றன...!
மலர்களும் பொறாமை கொள்ளும் மங்கையிவளின் வண்ணக் கைக்குட்டையின் வாசனையை நுகர்ந்தால்..!
மின்மினிப்பூச்சிகளுடன் கண்ணாமூச்சி விளையாடத்தெரிந்த கண்மணி அவள் மட்டும் தான்...!
கரடி பொம்மைகளை கட்டிப்பிடித்து விளையாடாதே...
அதற்கு உயிர் வந்துவிட்டால்
உன்மேல் காதலும் வந்துவிடும்...!
உன்னை முழுவதுமாய் படைத்துமுடித்த பின் உன்னை ரசித்து ரசித்து பிரம்மனும் பிரம்மித்திருப்பான்...!
உன் வீட்டுக்கண்ணாடி என்ன தவம் செய்ததோ ...
நீ செய்யும் ஒப்பனைகளையெல்லாம் ஒவ்வொன்றாய் ரசிப்பதற்கு...!
ஜிமிக்கிகள் சிறுபிள்ளைகள் போல சிரித்துக்கொள்கின்றன...
உன் காதுகளில் ஊஞ்சலாடும் போது...!
Kavithaigal in tamil
1 கருத்துகள்
அருமை.. நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்களை பகிரவும்