Tamil kadhal kavithaigal |
முதல் பார்வையிலே என்னை உனக்குள்ள முதலீடு செஞ்சுப்புட்ட...!
காதல் வார்த்தையிலே என்னைக் களவாடி சென்றுவிட்ட....!!
திருநெல்வேலி அல்வா போல என்னை தெகட்டாம தின்னுபுட்ட...
கொஞ்சல் பேச்சுலயே என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுபுட்ட...
உன் தெத்துப்பள்ளு சிரிப்புல தான் நீ என்னை சிதைச்சுப்புட்ட...!
உன் கண்ணக்குழி அழகுல தான் என்னை நீயும் புதைச்சுப்புட்ட...!!
என் இதய அறை பூட்டையெல்லாம் சுக்குநூறா உடைச்சுபுட்ட...!
உன் இதயச் சிறையில தான் என்னை பக்குவமா அடைச்சுப்புட்ட...!!
உன் கருங்கூந்தல் காட்டுக்குள்ள என் கண்ணக்கட்டி விட்டுப்புட்ட...!
என்காதல் கூட்டுக்குள்ள ஏன் தீயைமூட்டி போட்டுபுட்ட...!?
உன் உதட்டோர மச்சம் காட்டி, என்னை நீதான் மயக்கிப்புட்ட...!
என் மனசுக்குள்ள மகுடம் சூட்டி, நீயே தான் ஜெயிச்சுப்புட்ட...!!
விலகி நானும் செல்ல செல்ல கோபத்தில கொதிச்சுபுட்ட..!
பழகி நீயும் மெல்ல மெல்ல உன் காலடிய பதிச்சுபுட்ட...!!
காதல் மழையில தான் என் ஹார்ட்டுக்குள்ள காளானா முலைச்சுபுட்ட....!
உன் கை வளையலை போல தான் என்னை நீயும் வளைச்சுபுட்ட...!!
என்னை பாறை போல செஞ்சுவச்சு அலையா வந்து அரிச்சுப்புட்ட..!
உன்னை பாதை மறைச்சு முத்தம் கேட்க வெட்கம் வந்து சிரிச்சுபுட்ட..
அம்மிக்கல்லு பல்ல வச்சு என் அடிநெஞ்ச அரைச்சுப்புட்ட..!
டயட் ஏதும் இல்லாம என் வெயிட்ட கொறைச்சுப்புட்ட... !! 😜
#Tamil kadhal kavithaigal
0 கருத்துகள்
உங்கள் கருத்துக்களை பகிரவும்